திருகோணமலை, சம்பூர் – நீலாங்கேணி பகுதியில் 6 வயது சிறுமியின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் தலைமையில் நேற்று மாலை பிரேதப் பரிசோதனை நிறைவு செய்யப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கை சம்பூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என திருகோணமலை வைத்தியசாலை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சிறுவன் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.