ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமல்போன சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தமது விசாரணைகளை நிறைவு செய்ய உள்ளனர்.
அதனை தொடர்ந்து தமது இறுதி அறிக்கையை இரு வாரங்களுக்குள் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்க உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் சந்தேக நபர்களாக இனங்காணப்பட்ட எட்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கான பரிந்துரை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரகீத் எக்னெலியகொடயைச் கடத்தியமை, கொலை செய்தமை தொடர்பில் குறிப்பிட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குத் தேவையான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.