நாட்டில் மீண்டும் டெங்கு அபாயம்

256 0

நாட்டின் பல மாகாணங்களில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, இரத்தினப்புரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்சசல் அதிகம் பரவுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதன் காரணமாக இம்மாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a comment