சய்டம் பிரச்சினை காரணமாக பல்கலைகழக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதற்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் என உயர் கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பிரச்சினைகளுக்கு வெகு விரைவில் தீர்வொன்றை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று (02) மாலை உயர் கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் பதவி ஏற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.