தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவில் தொடரும் இந்த போராட்டங்களால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்கள் செல்லும் சரக்கு பாரவூர்திகளின் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
சில நாட்களாக ஆந்திரா வழியாக பயணித்து வந்த சரக்கு பாரவூர்திகளும் அங்கு இடம்பெறும் நிர்வாக முடக்கல் போராட்டம் காரணமாக தமிழக எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஆயிரத்து 400 கோடி ரூபாவுக்கும் அதிகமான பொருட்கள் மாநிலம் முழுவதும் தேங்கி கிடக்கின்றன.
இந்தநிலையில், தொழில்களில் ஈடுபடுபவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.