கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் ஒன்று சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றின் பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
குறித்த கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அதனை நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
புதிய பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 08ம் திகதி ஆரம்பமாக உள்ளத்துடன் இந்த பாராளுமன்ற அமர்வு தொடர்பில் நாளை நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாக பாராளுமன்றின் பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல மேலும் குறிப்பாட்டார்.