செப்டம்பர் 11 தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 15 வருடங்கள் ஆகின்றன.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் இரட்டை கோபுரங்கள், அல்-குவைதா தீவிரவாதிகளினால் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி தாக்குதலுக்கு இலக்கானது.
அமெரிக்காவுக்கு சொந்தமான, பயணிகள் வானூர்திகளை கொண்டு நியூயோர்க் உலக வர்த்தக மையத்தின், இரட்டை கோபுர கட்டடங்களின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலில் 110 மாடிகள் கொண்ட அந்த உயர்ந்த இரண்டு கட்டடங்களும் தரைமட்டமாகின.
இதன்போது வானூர்தியில் இருந்த 147 பயணிகளும், கட்டடத்தில் இருந்த 2 ஆயிரத்து 606 பேரும் உயிரிழந்தனர்.
அத்துடன், அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான, பென்டகன் மீது, மற்றுமொரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலின் போது வானூர்தியில் இருந்த 59 பேரும், பென்டகனில் இருந்த 125 இராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல்களுக்கு ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்-குவைதா பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.