மே தினத்தினை பிற்போட்டமையானது வரலாற்றில் பதியப்பட வேண்டும் -தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்.

323 0

தேசிய அரசாங்கம் சர்வதேச மே தின கொண்டாட்டங்களை வெசாக்  தினத்தினை முன்னிட்டு பிற்போட்டுள்ளதாக  பொய்யான நாடகத்தினை அரங்கேற்றியுள்ளது. பிரதமர் மற்றும ஜனாதிபதியின் கபட நாடகத்தின் ஒரு அங்கமாகவே இவை காணப்படுகின்றது என தேசிப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர குற்றஞ்சாட்டினார்.

இது மேலும் தெரிவித்ததாவது,

உழைக்கும் மக்களை பெருமைப்படுத்தும் முகமாக நேற்று சர்வதேச மட்டத்தில் மே தினம் கொண்டாடப்பட்டது . ஆனால் இலங்கையில் மாத்திரம் சில காரணங்களை மையப்படுத்தி தேசிய அரசாங்கம் பாரம்பரியத்திற்கு முரணாக 7ஆம்  திகதிக்கு கொண்டாடத்தை ஒத்திவைத்துள்ளமை வரலாற்றில் பதிய வேண்டியதாகவே காணப்படுகின்றது.

வெசாக் தினத்தினை முன்னிட்டு பௌத்த மதகுருமார்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக இந்த தீரமானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக காணப்பட்டாலும் . அவை மறுபுறத்தில் தொழிலாளர்களுக்கு பாதகமாகவே காணப்படுகின்றது. பெரும்பாண்மையான மக்கள் மே முதலாம் திகதியினையே உழைப்பாளர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.

தேசிய அரசாங்கம் மே தின விடுமுறை மற்றும் கொண்டாட்டங்களை 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்தாலும் , அதனை யாரும் மதிக்கவில்லை. தேசிய அரசாங்கமே மதிக்காமல் செயற்பட்டு வருகின்றது . ஐக்கிய தேசிய கட்சி மே தின கொண்டாட்டங்களை 6 ஆம் திகதி அதவாவது ஞாயிற்றுக்கிழைமை கொண்டாடவுள்ளது.  இரு கட்சிகளின் ஒன்றினைந்த நிர்வாகத்திற்கு இது சிறந்த உதாரணமாக காணப்படுகின்றது.

மே தினக் கொண்டாட்டங்களை ஒவ்வொரு  கட்சிகளும் வெவ்வேறு தினங்களில் கொண்டாடும் போது பல தியாகங்களுக்கு மத்தியில் பெற்றுக் கொள்ளப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகள் மறைக்கப்பட கூடிய சூழ்நிலைகள் தோற்றம் பெறும். தேசிய அரசாங்கத்தின் இந்த செயற்பாடு காரணமாக  எதிர்காலத்தில் உழைப்பாளர்களின் உரிமைகள் பெறுவது உறுதியற்றதாக காணப்படும் என தெரிவித்தார்.

Leave a comment