ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும், ஐக்கிய தேசிய கட்சியையும் கலைத்து விட்டு, புதிய கட்சி ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஹோமாகம நகரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிகழ்வில் ஐக்கிய தேசியின் கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்வில் சுதந்திர கட்சியினர் பங்குகொள்கின்றனர்.
இந்தநிலையில் இரண்டு கட்சிகளையும் கலைத்துவிட்டு ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி எனும் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.