நக்ல்ஸ் தீ தொடர்கிறது

335 0

fire-pic-10நக்ல்ஸ் மலைத்தொடர் பிரதேசத்தின் இரண்டு பகுதிகளின் ஏற்பட்டுள்ள தீ பரவல் காரணமாக இதுவரையில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெல் 212 ரக உலங்கு வானுர்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வான்படையின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நக்ல்ஸ் மலைப்பகுதியின் யஹன்கல மற்றும் கஹடகொல்ல ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீ தொடர்ந்தும் பரவி வரும் நிலையில், கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.