ஐ.தே கட்சியில் ஜனாதிபதி பங்குகொண்டமை தவறில்லை

367 0

dhayasri-jayasegara-865ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்குகொண்டமை ஊடாக சுதந்திர கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனை குறிப்பிட்டார்.

கூட்டு எதிர்கட்சியின் சில உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கருத்து குறித்து ஊடகவியலாளர்கள், குருநாகலில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் வகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதிக்கு எந்தவகையில் உதவி புரிந்தது என்பது தெரியும்.

அதன்படி, இந்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டதில் தவறில்லை என தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒன்றாக இணைந்து செயற்பட்டாலும், தேர்தலில் பிரிந்து தனித்தனியே போட்டியிடுவோம் எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.