மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் அனைத்துலக மக்களின் தொழிலாளர் உடைய உரிமைகளை மேன்படுத்துக்காக என்னும் கருப்பொருளில் இன்று (01) உலக தொழிலாளர்கள் தின ஊர்வலம் யாழ்.பொஸ்கோ ஆரம்ப பாடசாலை மைதானத்தில் இருந்து ஆரம்பமாகியது.
இந்நிகழ்வு மக்கள் விடுதலையின் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்கா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஊர்வலமானது யாழ்.பொஸ்கோ ஆரம்ப பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி நல்லூர் கோயில், யாழ்.வைத்தியசாலை வீதியுடாக யாழ் மாநகர பிரதான மைதானத்தை சென்றடைந்து அங்கு விசேட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் யாழ்.பல்கலைகழக தொழிற்சங்கத்தினர், அனைத்துலக தொழிலாளர்கள் சங்கம், மின்சார சபையினர், அரச ஊழியர்கள், ஓய்வூதிய சங்கம், மீனவ சம்மேளனம், கைதிகளில் அமைப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.