இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் 334 மனிதக்கொலைகள் இடம்பெற்றுள்ளன.
2015ஆம் ஆண்டின் இதேகாலப்பகுதியில் 443 கொலைகள் இடம்பெற்றதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதம் வரை இடம்பெற்ற 334 கொலைகளில், 90 கொலைகள் மேல்மாகாணத்தில் பதிவாகியுள்ளன.
இதேவேளை இந்தக்காலப்பகுதியில் கொலை முயற்சிகளுக்கான 267 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் துப்பாக்கிகள் மூலமான 156 கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில் 2013இல் முதல் எட்டு மாதங்களில் 402 கொலைகளும், 2014ஆம் ஆண்டில் 391 கொலைகளும் இடம்பெற்றதாகவும் தெரிக்கப்படுகிறது.