விடுதலைப்புலிகளுடன் தான் எவ்வித ஒப்பந்தங்களும் செய்யவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் 70வது ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மதம் மற்றும் இனத்தவர்கள் தொடர்பிலும் நாம் பெருமை அடைகிறோம்.
நாம் அனைவரும் தேசத்தை நேசிப்பவர்கள். ஆனால் சிலர் விடுதலைப் புலிகளுடன் உடன்படிக்கை செய்தவர்களை தேச பற்றாளர்கள் என்கிறார்கள் என்றும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பண்டாரநாயக்க உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சியுடன் உடன்படிக்கை செய்து கொண்டால் தேசதுரோகிகள் என்கிறார்கள்.
பிரபாகரன் உருவாக்கிய விடுதலைப் புலிகளுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்களை தேசபற்றாளர்கள் என்கிறார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர் இப்போது மக்கள் தீர்மானிக்கலாம் யார் தேச துரோகிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.