ஜப்பானை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் ரோபோவொன்றை (True Transformers) தயாரித்துள்ளார்.
பெரியவர்கள் சிறியவர்கள் அனைவரும் விரும்பிப்பார்க்க கூடியளவில் மின்மாற்றிகளினால் உருவாக்கப்பட்ட ரோபோக்கள், மனித வடிவிலிருந்து கார் வடிவமாக உருமாற்றப்படுகின்றது. இது அன்றாட வாழ்வில் ஒரு யதார்த்தத்தை மாற்றியமைக்கத்தக்கவகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
J-DITE RIDE எனப்படும் RIDE என்ற பெயரிலுள்ள மனிதவடிவிலான ரோபோ ஒரு நிமிடத்தில் கார் வடிவமாக உருமாற்றப்படுகின்றது.
இந்த ரோபோவை ஒரு மணி நேரத்திற்கு 60 மைல் வேகத்தில் இயக்க முடியும் என அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இந்த ரோபோவை ஜப்பான் வெளியிட்டது. சங்கிலி வாகன கட்டமைப்புடன் ரோபோ வடிவத்தில் கிட்டத்தட்ட 4 மீற்றர் உயரமுடையது.
J-deite RIDE – மூன்று தனி ரோபோக்கள் மற்றும் இயந்திர நிறுவனங்களுக்கிடையில் ஒரு கூட்டு நிறுவனம் 2014 முதல் தயாரிப்பின் முயற்சியின் பயனாக இப்போது ஜப்பானிய கண்காட்சிகளில் இதை காண்பிக்கத் தயாராக உள்ளனர். மேலும் நவம்பர் மாதம் புளோரிடாவில் IAAPA Attractions Expo 2018 இல் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.