விடுதலைப் புலிகளினுடனான யுத்த வெற்றி தொடர்பில் தானும் புத்தகம் ஒன்றை வெளியிடப் போவதாக அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தன்னுடைய வேலைப் பளு காரணமாக தான் இதுவரை இதைப் பற்றி சிந்திக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிலர் யுத்த வெற்றி தொடர்பில் புத்தகம் வெளியிடுவதாக கூறி உண்மையான யுத்த வெற்றியை சிதைப்பதாகவும் அமைச்சர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டமை தொடர்பாக மேஜர் ஜெனரல் குணரத்ன அண்மையில் ‘நந்திக்கடலுக்கான பாதை ‘என்ற நூலினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் புத்தகத்தில் புதிய தலைமைத்துவம் ஒன்று புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவத்துக்கு ஈடான காத்திரமான இடத்தைப் பிடிக்க முடியாது என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.