முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தின் மூன்றாவது அமைச்சரவை மறுசீரமைப்பு இன்று இடம்பெறவுள்ள நிலையிலேயே அவர் அங்கு வருகைதந்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக பதவி வகித்த அவர் அமைச்சரவையின் கூட்டு பொறுப்பை மீறி செயற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.