நாட்டின் பிரச்சினைகளின் ஆழத்தைப் புரிந்து செயற்பட வேண்டும்-ஜனாதிபதி (காணொளி)

511 0

president

நாட்டிலுள்ள பிரச்சினைகளின் ஆழத்தைப் புரிந்துகொண்டு, புத்திக்கூர்மையுடன் செயற்பட வேண்டிய தருணத்தில் இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி,
நாங்கள் பிரச்சினைகளின் ஆழம் பற்றி இணம் காண வேண்டும்.
நாங்கள் புத்தியுடனும் முதிர்ச்சியுடனும் பிரச்சினைகளை நோக்கி பார்க்க வேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 62 இலட்சத்து 50 ஆயிரம்பேர் எமக்கு வாக்களுத்தது நாம் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளுக்காகவே.
அவற்றை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளேன்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்தி கட்சியின் 65வது ஆண்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யோசனைகளும், இன்று இங்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையே.
ஆகவே இரு கட்சிகளினதும் யோசனைகளில் ஒற்றுமை இருக்கிறது. இருகட்சிகளுடைய ஒற்றுமையான ஒரே யோசனையை கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வோம்.
நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து இனத்தவர்களுக்கும் பொருந்தக் கூடியவாறான புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அர்ப்பனிப்புடன் செயற்படுவோம்.
சில ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்துகிறது.
ஆகவே பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்த வேண்டாம் என்று நான் ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்று மேலும் தெரிவித்தார்.