2020ஆம் ஆண்டாகும் போது நாட்டின் கடன் சுமையை குறைப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் இன்று பொரளை கெம்பல் மைதானத்தில், அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பிரதமர்,
ராஜபக்ஷ குடும்பம் பெற்ற கடன்களை நாங்கள் அடைப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ குடும்பம் பெற்ற கடன் சுமையை எமது காலத்திற்குள்ளேயே நாங்கள் செலுத்தி முடிப்போம்.
இவற்றை நாம் பிரிந்து நிறைவேற்ற முடியாது.
நாங்கள் அரசியல் தீர்வை நோக்கி செல்ல வேண்டும்.
அதற்காக நாங்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்குவோம்.
இது தொடர்பாக இன்னும் இறுதி தீர்மானங்கள் இல்லை.
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து தற்போது பேச்சுவார்த்தைகளே இடம்பெற்று வருகின்றன.
பின்னர் அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிப்போம். பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டால் தான் அதனை சட்டமூலமாக சமர்பிப்போம்.
அனைத்து மதம் மற்றும் இனத்தவர்கள் தொடர்பிலும் நாம் ஆடம்பரம் அடைகிறோம்.
நாம் அனைவரும் தேசத்தை நேசிப்பவர்கள்.
ஆனால் சிலர், விடுதலைப் புலிகளுடன் உடன்படிக்கை செய்தவர்களை தேச நேசர்கள் என்கிறார்கள்.
பண்டாரநாயக்க உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சியுடன் உடன்படிக்கை செய்து கொண்டால் தேச துரோகிகள் என்கிறார்கள்.
பிரபாகரன் உருவாக்கிய விடுதலைப் புலிகளுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்களை தேச நேசர்கள் என்கிறார்கள்.
தற்போது மக்கள் தீர்மானிக்கலாம் யார் தேச துரோகிகள் என்று.
எனவே அனைத்து இனத்தவர்களும் ஒற்றுமையுடன் வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்
March 5, 2025 -
அன்னை பூபதி அவர்களின் நினைவுக் கவிதைப் போட்டி 2025
February 24, 2025 -
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025