தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனின் வீட்டில் இன்று (26) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,
அரசாங்கத்தின் வேண்டுகோளை கௌரவப்படுத்த வேண்டும் என்பதனால், வெசாக் நிகழ்வுகள் நடைபெறுகின்ற இடங்களில் மே தின நிகழ்வுகளை நடாத்தாது, வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்வதுடன், இந்த பிரதேசங்களில் உள்ள பௌத்த தலங்களுக்கு இடையூறுகளை விளைவிக்காத வகையில், உலக தொழிலாளர் தினத்தினை மே 01 ஆம் திகதியே கொண்டாட வேண்டுமென்று தீர்மானித்துள்ளோம்.
இந்த தீர்மானம் எந்தவிதத்திலும், பௌத்த புனித நாளை அகௌரவப்படுத்துவதாக ஆகாது. பெளத்த மக்களை கண்ணியப்படுத்தும் முகமாக, யாழ். மாவட்டத்தைப் பொருத்தவரையில் பருத்தித்துறையில் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதற்கும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை பிரதேசங்களை உள்ளடக்கியதாக வெள்ளாவெளிப் பிரதேச சபையின் விளையாட்டு மைதானத்திலும் கொண்டாட தீர்மானித்துள்ளோம்.
உலக மேதினக் கொண்டாடத்திற்கான தீர்மானம் பௌத்த மகாநாயக்கர்களின் வேண்டுகோளைப் புறக்கணித்ததாக அமையாது. அவர்களை கண்ணியப்படுத்தும் முகமாக, இந்த மேதின நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் செயற்பாட்டை கண்ணியப்படுத்தும் முகமாக, 12 மணிக்குப் பின்னர் வர்த்தக, வியாபார உரிமையாளர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி, தொழிலாளர்கள் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வர்த்தக பெருந்தகைகளிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வேண்கோள் விடுத்துள்ளனர்.