இறைச்சிக் கடைகள், களியாட்ட நிலையங்களை 2 நாட்களுக்கு மூட அரசு நடவடிக்கை

252 0

இம்மாதம் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் கொண்டாடப்படவுள்ள வெசாக் பௌர்ணமி தினங்களை முன்னிட்டு, இறைச்சிக் கடைகள், மதுபான விற்பனை நிலையங்கள், கெசினோ சூதாட்ட நிலையங்கள் மற்றும் களியாட்ட விடுதிகளை (கிளப்) மூடிவிடுவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், பல்பொருள் அங்காடிகளிலும் (சூப்பர் மார்கெட்), மதுபானங்கள் மற்றும் இறைச்சி, மீன்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறைச்சிக்கான விலங்குகளைக் கொல்லும் இடங்களும், அவ்விரு தினங்களும் மூடப்படுமென, அரசாங்கம் அறிவித்துள்ளது

Leave a comment