கடந்த 2015ஆம் ஆண்டு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட எவன்கார்ட் கப்பலின் மற்றுமொரு சந்தேகநபர் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் எவன்கார்ட் கப்பலின் நடவடிக்கை முகாமையாளராக பணிபுரிந்தவர்ரென தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பில், குற்றவிசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வந்த விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் கடற்படை லெப்டினான 43 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்றைய தினம் காலி நீதவான் நீதமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.