வங்காளதேசம்- தொழிற்சாலை தீவிபத்தில் 21 பேர் உடல் கருகி பலி

340 0

201609101450418790_21-killed-in-bangladesh-factory-fire_secvpfவங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்கா அருகே தொழிற்சாலையில் இன்று பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 21 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்கா அருகே தொழிற்சாலையில் இன்று பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 21 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவின் வடபகுதியில் பொருட்களை ‘பேக்கிங்’ செய்யும் பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றுள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை வழக்கம்போல் உற்பத்தி தொடர்பான வேலைகள் நடந்து வந்தன.

காலை சுமார் 6.15 மணியளவில் இங்குள்ள ஒரு ராட்சத கொதிகலன் (பாய்லர்) திடீரென வெடித்து சிதறியது. இதையடுத்து, நான்கு மாடிகளை கொண்ட அந்த தொழிற்சாலையில் மளமளவென தீ பரவியது. உள்ளே இருந்த தொழிலாளர்கள் பீதியால் அலறியபடியே உயிர்பயத்துடன் வெளியே ஓடிவந்தனர்.அவர்களில் பத்துபேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த 20-க்கும் அதிகமானோர் டாக்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் அடுத்தடுத்து 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, இவ்விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.