சாட்சியமற்ற போரின் அழியா சாட்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘வலிசுமந்த நினைவுகள்’ நூல் பிரான்சில் வெளியிடப்படுகிறது!

667 0

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட சாட்சியமற்ற போரின் அழியா சாட்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘வலிசுமந்த நினைவுகள்’ நூல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (29.04.2018) பிரான்சில் வெளியிடப்படுகிறது.

புலம்பெயர் வாழ் ஈழத்து இளம் படைபாளியான நிஜத்தடன் நிலவனின் உருவாக்கத்தில் உயிர்ப்பூ வெளியீடாக உருவாகயிருக்கும் ‘வலிசுமந்த நினைவுகள்’ நூலானது சிங்கள பௌத்த பேரினவாத பேயாட்சியின் தமிழினப்படுகொலை வரலாற்றின் வடுக்களை தமது உடல்களிலும் உள்ளங்களிலும் நினைவுகளிலும் சுமந்து உயிர் சாட்சியாக திகழ்ந்து வருபவர்களின் நேர்காணல் தொகுப்பாகும்.

தமிழினப்படுகொலை வரலாறு திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில் வலி சுமந்தவர்களின் நினைவுகளை அடைகாத்து உலகத்தார் மனச்சாட்சியின் முன் ஆவணத்தொகுப்பாக கொண்டுவந்திருக்கும் ‘வலிசுமந்த நினைவுகள்’ நேர்காணல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நிகழ்வு வவn-தமிழ்ஒளி அனுசரணையுடன் பிரான்ஸ் SOCIETE DINATH.G, 51 AVENUE PAUL VAILLANT COUTURIER, 93120 LA COURNEUVE என்னும் இடத்தில் உள்ள சங்கநாதம் அரங்கில் வரும் ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து நூல் அறிமுக விழா நிகழ்வு எதிர்வரும் திங்கள் அன்று (30.04.2018) சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளது. சுவிட்சர்லாந்து Restaurant Kleinholz, Hausmatrain 48, 4600 olten எனுமிடத்தில் உள்ள சங்கநாதம் அரங்கில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இயங்கு விசையாக உலகத் தமிழர்களை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் தமிழினப் படுகொலைக்கான நீதி கேட்கும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக புலம்பெயர் வாழ் ஈழத்தமிழ் படைப்பாளி நிஜத்தடன் நிலவன் எழுத்தில் உயிர்ப்பூ வெளியீட்டுப் பிரிவால் உருவாக்கப்ட்டிருக்கும் ‘வலிசுமந்த நினைவுகள்’ நேர்காணல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழா நிகழ்வுகளிற்கு அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றனர் வெளியீட்டுப் பிரிவினர்.

Leave a comment