பொருளாதாரம் ஸ்தீரமற்ற நிலையில் பொதுத் தேர்தல் அவசியம் – மஹிந்த ராஜபக்ஷ

255 0

அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால், நாட்டின் பொருளாதாரம் ஸ்தீரமற்ற நிலையில் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் அரசியற் குழு உறுப்பினர் லால்காந்தவின், தாயாரின், மரண வீட்டுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி, அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேனவின் வீட்டுக்கும் விஜயம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், பாராளுமன்றத்தில் பிரேரணை முன்வைக்கப்பட்டதன் பின்னர் தன்னால் இதுத் தொடர்பில் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியுமெனக் குறிப்பிட்டுள்ளார்.

முறையான நிர்வாகம் இல்லாத காரணத்தினால், விலைவாசி விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்வடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் அனைத்து விடயங்களும் நிலையற்ற தன்மையில் காணப்படுவதாகவும், அரசாங்கத்தின் சொத்துகளை எவர் வேண்டுமானாலும் விற்பனை செய்யும் நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரேத் தீர்வு பொதுத் தேர்தலே எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்

Leave a comment