இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் காஷ்மீர் சிறுமி ஆசிபாவுக்கு நீதி வேண்டி மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று நேற்று நடைபெற்றது
குறித்த கண்டனப் பேரணியில் சிறுமி ஆசிபாவுக்கு ஏற்பட்ட கொடூர வன்செயலினை கண்டித்தும் நீதி வேண்டியும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த பேரணியில் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாச்சார பீடத்தின் சமூக விஞ்ஞான கற்கைகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஏ. ரமீஸ் அவர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இக்கண்டனப் பேரணியில் சுமார் 1500 க்கு மேற்பட்ட பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கலந்து குரல் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.