படித்த இளைஞர்கள் அநீதியை தட்டிக்கேட்க முன் வரவேண்டும்- சகாயம்

369 0

201609101912205661_educated-youth-should-come-forward-to-challenge-injustice_secvpfபடித்த இளைஞர்கள் அநீதியை தட்டிக்கேட்க முன் வரவேண்டும் என்று கோவையில் சகாயம் பேசினார்.கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பாக ஊறி திளைக்கும் ஊழலில் இருந்து தாய் நாட்டை காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்ட துணைத்தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் சகாயம் ஐ.ஏ.எஸ். பேசியதாவது:-ஊழலில் இருந்து நாட்டை காக்க படித்த இளைஞர்கள் முன் வரவேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் நேர்மையாக இருப்பது மிகவும் கடினம். ஆனால் நேர்மைதான் மனிதனுக்கு அழகு. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊழலிலின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டை பாதுகாக்க மாணவர்கள் தமிழ்மொழியை ஆர்வத்து டன் கற்க வேண்டும். நான் எனது தாயையும், தமிழ்மொழியையும் அதிகம் நேசிக்கிறேன்.

படித்த இளைஞர்கள் சுயநலத்துடன் இல்லாமல் அநீதியை தட்டிக்கேட்க வேண்டும். மக்கள் தான் அதிகாரிகளுக்கு அதிகாரத்தை வழங்குகிறார்கள். அந்த அதிகாரத்தை மக்கள் நன்மைக்கு பயன்படுத்த வேண்டும். ஊழல் நடந்தால் அடுத்த நிமிடம் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகள் தான். இதை மாணவர்களுக்கு கொண்டு சேர்த்தால் இனி வரும் சமுதாயம் ஊழல் இல்லாத சமுதாயமாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.