மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 55 ரன்கள் வித்தியசாத்தில் வீழ்த்தியது சேப்பாக்

380 0

201609101751150031_tnpl-chepauk-super-gillies-beats-madurai-super-giants-by-55_secvpfதிண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் இன்றைய முதல் லீக் போட்டியில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 55 ரன்கள் வித்தியாசததில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீழ்த்தியது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 21-வது லீக் போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் தலைவன் சற்குணம் (73), கேப்டன் ஆர். சதீஷ் (57 அவுட் இல்லை) ஆகியோர் சிறப்பாக விளையாட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.

பின்னர் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் அருண் கார்த்திக், விக்னேஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினர்கள். ஆனால், அவர்களால் அதிரடியாக விளையாட முடியவில்லை. மதுரை அணி 5.2 ஓவர்கள் முடிவில் 44 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. விக்னேஷ் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அதன்பின் வந்த வீரர்களை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளியில் பெவிலியன் திருப்பி அனுப்பினார்கள். அருண் கார்த்திக் மட்டும் 34 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 123 ரன்களே எடுக்க முடிந்தது.

இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 போட்டிகள் முடிவில் 4-ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.