காவிரி பிரச்சனை-தமிழகத்துக்கு ஆதரவாக நடிகர் சங்கம் போராட்டம்?

312 0

201609101724248882_actor-association-executive-meeting-tomorrow-cauvery-issue_secvpfதென் இந்திய நடிகர் சங்கத்தின் 11-வது செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அமைப்புகள் இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றன. கன்னட நடிகர் நடிகைகளும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தென் இந்திய நடிகர் சங்கத்தின் 11-வது செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார்.

சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இதில் செயற்குழு உறுப்பினர்கள் 24 பேரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் கூட்டத்தில் காவிரி பிரச்சனையில், தமிழகத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதில் நடிகர் சங்கம் சார்பில் கர்நாடகத்துக்கு எந்த வகையில் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பது பற்றியும் முடிவு செய்யப்படுகிறது.

காவிரி பிரச்சனையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதா? உண்ணாவிரதம் இருப்பதா? அல்லது எந்த முறையில் கர்நாடகத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

நடிகர் சங்க புதிய கட்டிடத்தை விரைவாக கட்டுவது, சமீபத்தில் நடிகர் சங்கத்திற்கு எதிராக பிரச்சனை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது என்பன உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

கூட்டத்தில் நடிகர் சங்க வரவு-செலவு தாக்கல் செய்யப்பட்டு செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்படுகிறது. நடிகர் சங்கத்தில் அடுத்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன.