கட்சியின் பொறுப்பாளர்கள் உட்பட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளையும் மறுசீரமைக்க அக்கட்சியின் மத்திய செயற்குழு நேற்றிரவு (24) தீர்மானித்துள்ளது.
அந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ள விதம் குறித்து மே 8 ஆம் திகதி கூடவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.தே.கட்சியும் தனது பொறுப்புக்களை முற்றாக மாற்றங்களுக்குள்ளாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அடுத்த பாராளுமன்ற அமர்வில் கட்சியிலிருந்து வெளியேறிய 16 பேரும் பாராளுமன்றத்தில் மஹிந்த குழுவுடன் இணைவார்களா? அல்லது என்ன அறிவிப்புக்களை விடுக்கப் போகின்றார்கள் என்பதை வைத்தே இந்த கட்சியின் பொறுப்புக்களில் புதிய மாற்றங்கள் இடம்பெறலாம் என அரசியல் விமர்ஷகர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரை மாற்றுமாறு அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் ஒரே குரலில் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் இவர்களை கட்சிக்குள் வைத்திருப்பதும் கடினமானது என்பதும் அரசியல் அவதானிகளினால் சுட்டிக்காட்டப்படுகின்றது.