சட்ட விரோத மின் கம்பியில் சிக்கி குடும்பஸ்த்தர் பலி!!

278 0

காட்டுப் பன்றிகளை பிடிப்பதற்காக சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூஜாபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 20 ஆம் திகதி புது வருட தினத்தில் சுப நேரத்தில் முதலாவதாக தனது வயலுக்குச் செல்வதாகக் கூறி அதிகாலையலே  வீட்டை விட்டுச் சென்ற குறித்த நபர் மறு நாளாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய  விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபரது சடலத்தை  காட்டுப் பகுதியில் இருந்து  கண்டெடுத்துள்ளனர்.

பின்னர் நடாத்திய விசாரணையின்போது குறித்த நபர் தனது வயலுக்கு செல்லும்  போது வயல்வெலியில் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் பின்னர் உயிரிழந்தவரின் உடலை இனந் தெரியாத யாரோ சுமார் 400 மீட்டர் தொலைவில் கொண்டு சென்று கைவிட்டிருந்மையும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் விசாரணைகளை நடாத்திய பொலிஸார் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் அவரை  கலகெதர நீதவான் முன் ஆஜர் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 52 வயதான எச்.எம். புஷ்பகுமார ஹேரத்  என்பவாராவார்.

இவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை கண்டி வைத்திய சாலையின் பிரதான சட்டவைத்திய அதிகாரி எம்.சிவசுப்ரமணியம்  நடாத்தி  மின் தாக்கத்தினால் ஏற்பட்ட மரணம் என  உறுதிப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூஜாபிட்டிய பொலிஸார் நடாத்துகின்றனர்.

Leave a comment