இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களில் ஒன்றான கடுகண்ணாவ கற்குகையின் கற்பாறையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக வாகன போக்குவரத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
1828 – 1830 ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு – கண்டி வீதி அபிவிருத்தியின் போது இந்த கற்பாறை வீதி நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
வெடிப்பு தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.