ஓடும் பஸ்ஸில் உயிரிழந்த பயணி

264 0

கொழும்பில் இருந்து ராகம நோக்கி பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் ஆசனத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; கொழும்பில் இருந்து ராகம நோக்கிப் பயணித்த பஸ் வண்டி இரவு 7.30 மணியளவில் ராகம பிரதேசத்தை நெருங்கியுள்ளது. எனினும் குறித்த பெண் பஸ்ஸிலிருந்து இறங்காமல் ஆசனத்திலேயே அமர்ந்திருந்துள்ளார். இதனை அவதானித்த நடத்துனர் அவர் உறங்கிவிட்டதாக எண்ணி அவரை எழுப்ப முயற்சித்துள்ளார். எனினும் அவர் எழுந்திருக்காத காரணத்தினால் உடனடியாக 119 என்ற அவசர இலக்கத்திற்கு அழைத்து அம்பியுலன்ஸ் வண்டி ஒன்றை வரவழைத்துள்ளார். பின்னர் பயணியை பரிசோதித்த வைத்தியர் அவர் உயிரிழந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஆசனத்திலேயே அமைதியாக உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வேயங்கொடை – அம்பேவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சுதர்மா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது கைப்பையை சோதனையிட்ட போது ரயில் அனுமதிப் பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டை உட்பட ஆவணங்கள் காணப்பட்டுள்ளது. அதற்கமைய அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a comment