பான்கிமூன் போர்க்குற்ற விசாரணைக்கான நீதிச்சபையை உருவாக்கியுள்ளார்

325 0

minister-keheliya-rambukwella-lookatvietnamcomஇலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற மீறல்களை விசாரணை செய்வதற்கு நீதிச்சபையை உருவாக்குவதற்குரிய ஆவணங்கள் ஐநாவினால் உருவாக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,

ஐநா செயலர் பான்கிமூன், சிறீலங்காவுக்கு வந்து சென்றபின் சிறீலங்காவைப் புகழ்கின்றார். ஆனால் இந்தப் புகழ்ச்சிக்கு மறுபுறத்தில் போர்க்குற்ற விசாரணை தொடர்பான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என்பவற்றை விசாரணை செய்வதற்கான நீதி சபையை பெயரிட்டு ஆவணப்படுத்தியுள்ளார் என ஐ.நாவின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது பதவி விலகல் காலத்திற்கு இன்னும் மூன்று மாதங்களேயுள்ள நிலையில், இந்த நீதி சபையை பரிந்துரைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பான்கிமூனின் பாராட்டுக்களின் பின்னணியில் ஆபத்துக்களே நிறைந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.