வடக்கில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை

323 0

images-63-5வடமாகாண சுகாதார அமைச்சியால் முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னாள் போராளிகளுக்காக மருத்துவ பரிசோதணையில் இதுவரை 26 முன்னாள் போராளிகள் பங்கேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் போது யாழ்ப்பாணத்தில் 9 முன்னாள் போராளிகளும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 14 முன்னாள் போராளிகளும் வவுனியா மாவட்டத்தில் 3 முன்னாள் போராளிகளும் மருத்துவ பரிசோதணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இருப்பினும் மன்னார் மாவட்டத்தில் எந்த ஒரு முன்னாள் போராளியும் வந்து இப் பரிசோதணைகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் 5 மாவட்டங்களிலும் உள்ள போதனா வைத்திய சாலைகளின் ஊடாக முன்னாள் போராளிகளுக்கான மருத்து பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இரண்டு கட்டமாக இவ் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசேதணை இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னால் ஆகிய 5 மாவட்டங்களிலும் நடைபெற்றது.
இதன் போது வைத்திய சாலைகளுக்கு வந்த முன்னாள் போராளிகளுடன் மருத்துவர்கள் கலந்துரையாடியிருந்தனர். இதன் பின்னர் ஆரம்ப பரிசோதணைகள் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.