உணவு தயாரிக்கும் எண்ணெய்களுக்கு தரங்கள் அறிமுகப்படுத்த திட்டம்

332 0

625-500-560-350-160-300-053-800-900-160-90உணவு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய்களுக்கு தரநிர்ணயங்களை அறிமுகப்படுத்துவதற்கு நுகர்வோர் அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையானது நீண்ட காலமாக அவதானத்தை செலுத்தி வருவதாக இதன் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.

சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மற்றும் தற்போது பாவிக்கப்படும் எண்ணெய் வகைகளானது எவ்வித தரங்களையும்,போசனைகளையும் கொண்டிருக்கவி;ல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்காரணமாக குறித்த எண்ணெய் வகைகளுக்கு தர நிர்ணயங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும்,எனினும் இதற்காக  தர நிர்ணயத்தை பெறுவது அவசியம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.