புகையிலை வரி அதிகரிப்புக்கு எதிரான அரசியல்வாதிகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் தகவல் கோரப்படுகிறது

278 0

16-1373973689-3-tax-large-300x225புகையிலைக்கான வரியை அதிகரிக்க இடமளிக்காத அதிகாரிகள் தொடர்பில் தகவல்களை தெரிவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல மாதங்களாக புகையிலை சார்ந்த பொருட்களுக்கு 90 வீத அறவிடுமாறு ஜனாதிபதி அறிவித்தும் இதுவரை அதற்கான வரி அதிகரிப்பு தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த வரி அதிகரிப்புக்கு சில அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயங்குவதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனவே நாட்டின் தலைவர் என்ற ரீதியில் பொதுமக்களின் நலனில் அக்கறை காட்டி உடனடியாக புகையிலைக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த புகையிலை வரி அதிகரிப்புக்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் யார் என நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.