கட்டுநாயக்க விமானநிலைய விமானிகள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக விமான பயணங்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என விமானநிலைய பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
வழமைப் போலவே விமான சேவைகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
விமானிகள் மது அருந்தியுள்ளார்களா என்பதை கண்டறிய முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட சோதனை நடவக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் விமானிகள் தமது தொழிற்சங்கத்துடன் ஒன்றினைந்து இந்த மெதுவாக வேலைசெய்யும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் விமான சேவைகளில் எவ்வித இடையூறுகளும் இன்றி வழமைப் போல் இடம்பெறுவதாகவும் விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இலங்கை விமான சேவையில் 10 தொடக்கம் 15 வீத விமானிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.