ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 12.30 மணியளவில் சந்தேகநபர் விமான நிலைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தனது இடுப்பு பட்டியில் மிகவும் சூட்சுமமாக 1கிலோ 4கிராம் ஹெரோயினை மறைத்து வைத்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
31 வயதான சந்தேகநபர் இந்தியப் பிரஜை என்றும், இவர் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.