பாதீ­னி­யத்தை ஒழிக்­கத் தவ­றினால் 2 ஆண்­டு­கள் சிறை!! பொதுமக்களே ஜாக்கிரதை!

892 0

பாதீ­னி­யச் செடி­கள் வளர்ந்துள்ள காணி­க­ளின் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. நட­வ­டிக்­கை­கள் உட­னடியாக நடை முறைப்படுத்தப்பட்டன.

பாதீ­னி­யம் வளந்­துள்ள காணி­யின் உரி­மை­யா­ள­ருக்கு இரண்டு ஆண்­டு­கள் சிறை­தண்­டனை அல்­லது 10 ஆயி­ரம் ரூபா தண்­டப் பணம் அற­வி­டப்­ப­டும் என்று சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தின் பிரதி மன்­றாடி அதி­பதி பி.குமா­ர­ரட்­ணம் தெரி­வித்­தார்.

இதற்­காக அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்டு 144 உத்­தி­யோ­கத்­தர்­கள் வடக்கு மாகா­ணத்­தில் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.காணி­க­ளில் பாத்தீ­னி­யத்தை அழிக்­கா­மல் வைத்­தி­ருப்­ப­வர்­க­ளின் நட­வ­டிக்ளை எடுப்­ப­தற்கு அதி­கா­ரம் வழங்­கப்­பட்டு அர­சால் நிய­மிக்­கப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்­கான தெளி­வூட்­டல் செய­ல­மர்வு கிளி­நொச்சி விவ­சாய பயிற்சி நிலை­யத்­தில் அண்­மை­யில் நடை­பெற்­றது.

நிகழ்­வின் வள­வா­ள­ராக கலந்து கொண்ட சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தின் பிரதி மன்­றாடி அதி­பதி பி.குமா­ர­ரட்­ணம் மேலும் தெரி­வித்­த­தா­வது; தாவ­ரப் பாது­காப்­புச் சட்­டத்­தின் படி மனி­த­ருக்­கும், மண் வளத்­துக்­கும், பயிர்­க­ளின் வளர்ச்­சிக்­கும் பாத்தீ­னி­யம் தீங்கு விளை­விக்­கும்.

ஆகவே, அதனை வள­வு­க­ளில் இல்­லா­மல் கட்­டு­ப­டுத்த வேண்­டும். வள­வு­க­ளில் இந்­தச் செடியை வைத்­தி­ருப்­பது இனம் காணப்­பட்­டால் அவற்றை அழிப்­ப­தற்கு குறிப்­பிட்ட கால அவ­கா­சம் வழங்­கப்­ப­டல் வேண்­டும்.வழங்­கப்­பட்ட கால எல்­லைக்­குள் அழிக்­கா­விட்­டால் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். சட்ட நட­வ­டிக்கை தொடர்­பான பிரதி எழுத்து மூல­மாக உரி­மை­யா­ள­ருக்கு வழங்­கப்­பட்­டுக் கையொப்­பம் பெறப்­ப­டும்.

அதன் பின்­ன­ரும் செடியை அழிக்­கா­மல் விட்­டால் அதி­கா­ரம் உடைய அதி­காரி தொழி­லா­ளர்­க­ளைக் கொண்டு அதனை அழித்து விட்டு வளவு உரி­மை­யா­ள­ரி­டம் இருந்து அதற்­கான பணத்தைப் பெற்று வழங்க முடி­யும்.இவ்­வா­றான நட­வ­டிக்­கை­கள் நடை­பெ­று­வ­தற்கு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­காத விடத்து அவர் குற்­ற­வா­ளி­யா­கக் கரு­தப்­பட்­டால், இரண்டு வருட சிறை தண்­டனை அல்­லது 10 ஆயி­ரம் ரூபா தண்­டம் அற­விட முடி­யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

Leave a comment