கட்சியின் தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்கப் போவதில்லை – ரணில்

347 0

blogger-image-1075572354ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் இன்னும் பத்து வருடங்களுக்கு பிறகே நியமிக்கப்படுவார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது 67 வயதாகும் பிரதமருக்கு 77 வயது ஆகும் வரை அவரே கட்சியின் தலைவர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னபெரும தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே பிரதமர் இதனைத் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 1994ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்து வரும் பிரதமர் ரணில் இன்னும் பத்து வருடங்களுக்கு தமைப்பதவி வகித்தால் 33 வருடங்கள் ஒரே கட்சியின் தலைவர் என்ற பெருமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையே சாரும்.

மேலும் எதிர்வரும் 10ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.