எதிர்வரும் நான்கு வருடங்களில் கொழும்பு நகரில் பாரிய மாற்றங்கள் செய்ய எதிர்பார்த்துள்ளதாக மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தற்போது திட்டமிட்டுள்ள நிதிநகரத்துக்கு அண்மையில் உள்ள வாவி நீர் மற்றும் அதனைச் சூழுவுள்ள பிரதேசங்கள் சுத்தப்படுத்தப்படவுள்ளதுடன்,வாவியைச் சூழவுள்ள சோி பகுதிகள் முற்றாக அகற்றப்பட்டு அவர்களுக்கான தனியான வீட்டுத்தொகுதிகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தின் கொழும்பு நகரை வர்த்தக மத்திய நிலையமாக மாற்றவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கொழும்பு புகையிரத நிலையம்,துறைமுகம் மற்றும் பஸ்தரிப்பிடம் ஆகிய பிரதான போக்குவரத்து மத்திய நிலையங்களுடன் மேலும் 5 போக்குவரத்து மத்திய நிலையங்கள் இணைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க குறிப்பிட்டுள்ளார்.