ஜே.வி.பி.யின் பிரேரணைக்கு மஹிந்த ராஜபக்ஷ நிபந்தனையற்ற ஆதரவு

392 0

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்கவிடம் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இருப்பினும்,  குறித்த பிரேரணையில் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளடக்கப்பட்டிருந்தால் மாத்திரமே பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடமிருந்த மூன்றில் இரண்டு வாக்குப்பலம் இல்லாமல் போயுள்ளதனால், இப்பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தால், இலகுவாக நிறைவேற்றலாம் எனவும் பந்துல குணவர்தன எம்.பி. நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment