இந்தியாவில் நிலவிவரும் பணத்தட்டுப்பாடு ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும் – எஸ்பிஐ தலைவர் தகவல்

258 0

இந்தியாவில் தற்போது நிலவிவரும் பணத்தட்டுப்பாடு இன்னும் ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும் என பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார். 

குஜராத், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மராட்டியம், தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. பணம் இல்லாமல் ஏராளமான ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறதா என்பது குறித்து பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பண புழக்கம் குறைந்துவிட்டது என்பது தவறான புரிதல். உண்மையிலேயே பண வினியோகத்தில் நாடு தழுவிய அளவில் ஒரு ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. இதுதான் சில இடங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட காரணம்.

வேளாண் பயிர் கொள்முதல் சீசன் இது என்பதால், பணத்திற்கான தேவை அதிகரித்து, இந்த ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருக்கலாம். எனவேதான் பஞ்சாப், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பணத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. நிலைமை இன்னும் ஒரு வாரத்திற்குள் சீரடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a comment