அமெரிக்க தலைமையில் மேற்கு நாடுகளின் கூட்டணி சிரியாவின் டமஸ்கஸ் நகரின் பல இடங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலையடுத்து ரஷ்யா ஐ.நா.வின் பாதுகாப்பு சபையை இன்று (14) கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிரியாவில் எஸ்-300 ரக ஏவுகணை தடுப்பு உபகரணங்களைப் பெற்றுக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் ரஷ்யா இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
“அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளினதும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுங்கள்” என ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டின் விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிரியா மற்றும் அதன் பகுதிகளில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமையினால் அந்நாட்டுடனான அனைத்து சர்வதேச தொடர்புகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் புட்டின் மேலும் அவ்வறிவித்தலில் குறிப்பிட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் கூறியுள்ளன.