இந்த சிங்கள – தமிழ் புத்தாண்டு நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் இலங்கையர்களுக்கு சமாதானமும், சௌபாக்கியமும் மிக்க இனிய புத்தாண்டாக அமைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிங்கள-தமிழ் புத்தாண்டின் மூலமாக கீழைத்தேய வாசிகளாகிய எம்முடைய உயரிய பண்பாடே வெளிப்பட்டு நிற்கின்றது.
புதுவருடம் என்பது உண்மையிலேயே புதிய பார்வையும் புதிய நோக்கும் கொண்ட புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதேயாகும். புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் தத்தமது நம்பிக்கைக்கு அமைவாக புத்தாண்டு சம்பிரதாயங்களுடன் இணையும் இந்த புதுமனிதன், புத்தாண்டு பிறப்புடன் அமைதி, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி சொந்தபந்தங்களை காணச் செல்லும் ஒரு சொந்தக்காரனாகவே இச் சமூகத்தில் பிரவேசிக்கின்றான்.
புதிய பார்வையும் புதிய நோக்கும் கொண்ட புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.