நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு 92 கிலோ கஞ்சா கடத்திச் சென்றதாக பீகார் மாநிலத்தை சேர்ந்த இரு பெண்களை அந்நாட்டு போலீசார் இன்று கைது செய்தனர்.
இந்தியா- நேபாளம் எல்லைப்பகுதியான ரஜாய்யா அருகே நேபாள நாட்டு போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய பதிவு எண்ணை கொண்ட ஓரு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனையிட முயன்றனர். போலீசாரை கண்டதும் அந்த வாகனத்தின் டிரைவர் தப்பியோடி விட்டார். இரு பெண்கள் மட்டும் வாகனத்தில் அமர்ந்திருந்தனர்.
அந்த வாகனத்தை சோதனையிட்டபோது, பல பகுதிகளில் 44 பொட்டலங்களில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நேபாளத்தில் உள்ள மகவான்பூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டு இந்தியாவுக்கு கடத்திச் செல்வதற்காக கொண்டு வரப்பட்ட 92 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார், பீகார் மாநிலத்தின் மோத்திஹரி மாவட்டத்தை சேர்ந்த சுமித்ரா தேவி சஹானி(35), ரிம்கி தேவி(25) ஆகிய இரு பெண்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.