வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் ஆளுநராக கடந்த மூன்று வருட காலமாக பதவி வகித்து வந்த ரெஜினோல்ட் குரே, பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நேற்று மத்திய மாகாண ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவருடன் புதிய ஏழு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், மத்திய மாகாண ஆளுநர் பதவியை இரத்துசெய்த ஜனாதிபதி, குரேயை மீண்டும் வடக்கு மாகாணத்தில் ஆளுநராக நியமித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வெற்றிடமாகிய மத்திய மாகாண ஆளுநர் பதவிக்கு, பீ.பி.திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண பதில் ஆளுநர் பொறுப்பும் பீ.பி.திஸாநாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.