நாட்டின் பல பாகங்களிலும் மாலை நேரத்தில் பெய்து வரும் இடியுடன் கூடிய மழை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் அதிகாரி மலிக் பிரணாந்து இதனைக் கூறியுள்ளார்..
பெரும்பாலான பகுதிகளில் மாலை 2.00 மணிக்கு மழை ஆரம்பிக்கும் எனவும், கிழக்கு, தெற்கு, ஊவா மாகாணங்களுக்கு காலை நேரத்திலும் மழை செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேல், வட மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு 100 மில்லி மீற்றர் மழை பெய்யலாம் எனவும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.