கூட்டரசாங்க ஒப்பந்தத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி நீங்கினால் அரசியலமைப்புக்கேற்ப 30 பேர் கொண்ட அமைச்சரவையை கொண்டு ஆட்சியமைக்க வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
இதனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அரசாங்கத்துடன் உள்ள ஏனையவர்களுக்கும் இந்த கூட்டரசாங்க உடன்படிக்கையிலிருந்து நீங்கி ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனி அரசாங்கம் அமைக்க இடமளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.
எம்மைப் போன்று எஞ்சியுள்ள ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து விலகினால், பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிப் பதவி ஸ்ரீ ல.சு.கட்சிக்கு வழங்கப்பட வேண்டும். புதிய அமைச்சரவையொன்றும் அமையும் எனவும் நேற்று இடம்பெற்ற இராஜினாமா செய்த 16 அமைச்சர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் டிலான் எம்.பி. மேலும் கூறினார்.